பொன் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அடற்றா வரவிடங்கள் அங்கொளி மங்கல்
கடத்தாமுத் தோடகயங் காசம் - உடற்றாபஞ்
சேகையிருந் தாதுநஷ்டந் திட்டிநோய் ஈளையிவை
ஈகையிருந் தாலேகும் எண்

- பதார்த்த குண சிந்தாமணி

தாவரவிடங்கள், உடல் பொலிவிழத்தல், முத்தோடம், சன்னி, கயம், இளைப்பு நோய், உடல் வெப்பம், சுக்கிலநட்டம், விழிநோய், கோழைக் கட்டு இவை விலகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-21, 6:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே