வெள்ளி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பாய்க்கூட்டங் காட்டாப் பழையசுரந் தாருவிடம்
வாய்க்கூட்டச் செய்மேக வாதமுதல் - நோய்க்கூட்டம்
அண்டாது காணிகொளும் அத்திமே கக்கசிவும்
வெண்டாது காணிமெய்யை மேல் 1
- பதார்த்த குண சிந்தாமணி
நேரிசை வெண்பா
இரத்தம் கயம்பித்தம் ஈளைகண்ணோய் காசம்
உரத்தையம் அஷ்டகுன்மம் ஊதை - வருத்தும்
விரணஞ் சிலேஷ்மநோய் மெய்ப்புளிபுண் ஊரல்
மரணமுறும் வெள்ளியினால் வாழ்த்து 2
- பதார்த்த குண சிந்தாமணி
பழையசுரம், மரவிடம், மேக வாதப்பிடிப்பு முதலான நோய்கள், ஒழுக்கு வெள்ளை, இரத்தபேதி, சயம், பித்தம், கோழை, விழிநோய், இருமல், மார்புச்சளி, அட்டகுன்மம், வாதம், கிரந்தி, நீர்க்கோவை, சிரங்கு, சொறி இவை வெள்ளியினால் நீங்கும்