பனம்பழம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நாளும் பனம்பழத்தை நல்லமுதாய் உண்ணுங்கால்
ஆளுங் கரப்பான் அழுகிரந்தி - நீளுமலஞ்
சிக்கும்பித் தத்தி(ல்)வளி சேருதலால் நோய்க்கணமு
திக்கும்ப லக்குமெனச் செப்பு
- பதார்த்த குண சிந்தாமணி
தினமும் பனம்பழத்தையே உணவாக உண்டால் கரப்பான், அழுகிய சிரங்கு, மலக்கட்டு, பித்தவாயுவால் ஏற்பட்ட நோய்கள் இவை உண்டாகும்