புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார் கவிஞர் இரா இரவி

புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்!
கவிஞர் இரா. இரவி !

எம்ஜிஆர் புகழ்பெற பாடல்கள் எழுதியவர்
எந்தக்காலமும் மறக்க முடியாத பாடல் தந்தவர்
இனஉணர்வு மிக்க அரசவைக் கவிஞராக இருந்தவர்
ஈழத் தமிழர்களுக்காக இறக்கும்வரை குரல் தந்தவர்
எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தை தான் என்றே எழுதியவர்
எந்தக்குழந்தையும் பிறப்பால் குற்றவாளி இல்லை என்றவர்
நாளை உலகை ஆளவேண்டும் என்றே எழுதியவர்
நாட்டை ஆள எம்ஜிஆருக்கு வழிவகுத்துத் தந்தவர்
இராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன்
இராமசாமி பெரியார் போலவே பகுத்தறிவு படைத்தவர்
இருக்கிற கோயிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
இனிய கல்விப்புரட்சிக்கு வித்திட்ட பாடல் பாடியவர்
உனது விழியில் எனது பார்வை என்று காதல் பாடல்களை
உன்னத ஒப்பற்ற பாடல்களை திரையில் வழங்கியவர்
ஆயிரம் நிலவே வா பாடல் யாராலும் மறக்க முடியாது
அந்த நிலவு உள்ள வரை அந்த இனிய பாடல் நிலைக்கும்
உன்னால் முடியும் தம்பி என்ற தன்னம்பிக்கை விதைத்தவர்
உணர்வால் தமிழை திரைஇசையில் யாத்துத் தந்தவர்
சிரித்து வாழ வேண்டும் என்ற பாடலால் நற்கருத்து எழுதியவர்
சிந்திக்க வைக்கும் வைர வரிகளை திரைப்படத்தில் தந்தவர்
தென்பாண்டி சீமையிலே என்ற திரைப்பாடலின் மூலம்
திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த கவிஞர்
உடலால் உலகை விட்டு மறைந்துவிட்ட போதிலும்
உன்னத பாடல் வரிகளில் வாழ்கிறார் மறையவே இல்லை!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (10-Sep-21, 8:33 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 50

மேலே