அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க கவிஞர் இரா இரவி

அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க!

கவிஞர் இரா. இரவி

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலே!
ஓங்கி ஒலித்து உறக்கம் களைய உழைத்தவரே!

சிம்ம சொப்பனமாக நாளும் வலம் வருபவரே!
சிம்மம் போல கருத்துக் கர்ஜனை செய்பவரே!

பாராளுமன்றம் வரை சென்று முழங்குபவரே!
பார் போற்றும் தலைவராக வலம் வருபவரே!

அறிவார்ந்த பேச்சால் பகைவரை வென்றவரே!
அக்கிரகாரங்களுக்கு பிடிக்காத அடித்தட்டுத் தலைவரே!

புராண இழிவுகளை தோலுரித்துத் தொங்க விட்டவரே!
புடம் போட்ட தங்கமென வந்த மாமனிதரே!

கருப்பர் இனத் தலைவராக உருவான திருமாவே !

கருப்பர்கள் கொண்டாடும் வெள்ளை உள்ளமே!

அடங்க மறு அத்து மீறு என வீரம் புகட்டியவரே!
அடிமை விலங்கை அடித்து நொறுக்கி விடிவித்தவரே!

சனாதனம் பேசியோரின் திமிரை அடக்கியவரே!
சனங்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தந்த தீரரே!

தென்னாட்டின் அம்பேத்கராக உருவெடுத்த திருவே!
தட்டிகேட்கத் தயங்காத துணிவின் திருஉருவே!


மனிதாபிமானத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னவரே!
மனிதர் யாவரும் சமமென சம்மட்டி அடித்தவரே!

பகைவர்களும் மதிக்கும் பண்பாளராக வளர்ந்தவரே!
பகை வேண்டாம் உறவாடுவோம் உரக்கச் சொன்னவரே!

ஆண்டான் அடிமை முறையை ஒழித்துக் கட்டியவரே!
அனைவரும் சமம் சமத்துவம் கண்ட சமத்தரே!

பெரியாரின் பேரனே அம்பேத்காரின் வாரிசே!
பைந்தமிழ் போலவே நீடுழி நீ வாழ்கவே!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (10-Sep-21, 8:50 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 38

மேலே