வெற்றிக்கண்டு ஏறு

துன்பம் என்னை தாக்கி
இதயத்தை இரண்டா வெட்டி
பதம் பாக்குதே ...

ஆழிநீரில் கப்பல் போல்.
தேம்பி அழுது கண்ணுத் தண்ணீல
விழிகள் இரண்டும் மிதக்குதே ...

நீயா அவனா மோதி பாரு
வந்து நின்னு கத்தீ சத்தம் போட்டு
இரண்டுல ஒன்னு பாரு ...

சரி எதுவோ கட்டிகாத்து
தவறெதுவோ தட்டிகேட்டு
நீதி சொல்லிட நம் நாட்டுக்குள்ளே
சட்டம் உண்டா பாரு ...

திட்டித் தீர்த்துக் கொட்டும் உலகை
நீ எட்டப் போட்டு ஓடு ...

உன்பாதை எங்கேயென்று தேடு
அதில் வெற்றிக்கண்டு ஏறு ...

நாடகம் போல் போகுற வாழ்வில்
ஒன்னுரண்டு புகழச் சேரு....

மேடு பள்ளம் இல்லாத
பாதையுண்டா நீ போகும் வழியிலே...
ஆனால் நீ சேரும் இடம் போக ஒளியுண்டு உன் வாழ்விலே ...

எழுதியவர் : BARATHRAJ M (10-Sep-21, 10:09 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 720

மேலே