அப்புறம் பாரு

அப்புறம் பாரு !!

பாப்பா நீ,
ஆடிப்பாடி மகிழ்ந்திரு,
அப்பா அம்மா
மகிழ்ந்திடுவார்.

பாப்பா நீ வளர்ந்து,
மயில் போல ஆடியே,
மயிலோனை மனத்தில்
ஏற்றிவிடு,
குயில் போல பாடியே,
குறத்தியையும் மனத்தில்
அமர்த்தி விடு.

அப்புறம் பாரு
உன் வாழ்வை,
ஆண்டவன் அருள்
புரிந்து விடும்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (11-Sep-21, 8:05 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : appuram paaru
பார்வை : 86

மேலே