மூன்று கேள்விகள்
மூன்று கேள்விகள்.
காலனை வென்ற
கேள்விகள் இது !!
" எங்கிருந்து
வந்தோம்?
ஏன் வந்தோம்?
எங்கு திரும்புவோம்?"
இதற்கெல்லாம்
பதில் தேடாமல்!
அலைகிறோம்
பணம் காசு தேடி.
படைத்தவன் நம்மை
பார்த்தே சிரிக்கிறான்!
ஆடி அடங்கிய பின்
தேடுவோம் பதில்,
அலைந்திடுவோம்
கோவில் குளம் தேடி.
பதில் சொல்லி
விட்டேன் நானுனக்கு,
பார் உங்கள்
உள்ளத்தை திறந்து,
என்கிறான் இறைவன்,
கேட்டதா அது உங்கள்
காதில்?
கேட்டது என் காதில்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.