நல்வினை யார்க்குங் கயிறு – திரிகடுகம் 23

இன்னிசை வெண்பா

தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார்
குற்றங் கடிந்த வொழுக்கமுந் - தெற்றெனப்
பல்பொரு ணீங்கிய சிந்தையும் இம்மூன்றும்
நல்வினை யார்க்குங் கயிறு. 23

- திரிகடுகம்

பொருளுரை:

தானத்தை கொடுக்கின்ற பெருஞ் செய்கையும், பழிக்கு நாணுதலுடையாரின் குற்றத்தை நீக்கிய நல்லொழுக்கமும்; தெளிந்த பல விடயங்களிலும் தீமைகள் நீங்கிய எண்ணமும் ஆகிய இம்மூன்றும் நல்ல அறத்தின் பயனை நீங்காதபடி கட்டுகின்ற கயிறாகும்.

கருத்துரை:

தானங் கொடுத்தலாலும், மானங் கெடாத நல்லொழுக்கத்தாலும், பொருள் மேலே சிந்தனை ஒழிந்திருப்பதனாலும் நல்வினைகளே மேன்மேலும் பெறலாம்.

தானம் - அறநெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையோடுங் கொடுத்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-21, 12:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே