காமப்பசி
பசி வயிற்றுத் தீ அதை
உணவுண்டு அணைத்து விடலாம் ஆனால்
மனிதரை வாட்டும் இந்த காமப் பசி
இது உடல் முழுதும் பரவி இருக்கும்
தீ இதை அடக்கி நடவாது போனால்
காட்டுத்தீ போல் மாறி மனிதரை
மிருகமாக்கி அழித்துவிடும் அடக்கியாண்டால்
அதுவே மனிதரை தெய்வமாக்கும்