உணவும் சமூகமும் - கட்டளைக்கலித்துறை

உண்ணும் உணவையே ஆழ்ந்ததாய் கண்டால் தெரிந்திடுமே
உண்மையும் ஞாலம் முழுதும் இருக்கும் மனிதரினம்
உண்ணும் உணவால் நிலையையும் வாழ்வும் அறியலாமே
உண்மையில் வாழ்ந்தது ஊர்ந்தா நிலைத்தா எனுவதையே --- (1)

நீண்டநாள் தாங்கும் வகையில் உணவினை செய்தவாறே
வேண்டும் பொழுதினில் உண்ணவே சேர்த்தே பதமாக்கியே
ஆண்டு முழுவதும் ஞாலமும் சுற்றிடும் யாருக்குமே
தூண்டும் பசியையே நீக்கும் உணவும் ஒருவகையே --- (2)

வேளைக் கொருமுறை உண்ணும் உணவினை ஆக்கினாலே
நாளெலாம் வைத்து புசிக்கும் நிலையிலே கெட்டிடுமே
காளையின் கொம்பென என்றும் உறுதியாய் காணிடுமோ
வாளால் அறுத்த இலைபோல் உணவது கெட்டிடுமே --- (3)

கெட்டிடும் தன்மையைக் கொண்ட உணவின் பழக்கத்தையே
கெட்டியாய் கொண்ட சமூகம் நிலைத்த குடிகளாமே
சுட்டே அடுக்கியே வைத்து பலநாள் கெடாதவாரே
கட்டிச் சுமந்தே புசிப்பது நாடோ டிசமூகமே. --- (4)
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (16-Sep-21, 6:48 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 33

மேலே