ஒரு மரத்தின் கதறல்
பட்டும் படாமல் சுட்ட சூரியன்
அணல் பறக்க அக்கினி மழை பொழிகிறான் ....
ஓடுகிறாயா....?
ஒதுங்க இடம் தேடுகிறாயா ?
வேண்டாம் வேண்டாம் என்று வெட்டினாயே
கிடைக்க மாட்டேன் இனி
வெக்கை வேர்வை தான் இனி
சுவாசத்தை தந்தேனே
மழையை தந்தேனே
நிழலை தந்தேனே
மருந்தை தந்தேனே
அனைத்தையும் தந்தும் நீ எனக்கு அழிவைத் தானே தந்தாய்...!
வெட்டவேண்டாம் என்பதில்லையே இரண்டை நட்டுவிட்டு ஒன்றை வெட்டு
அது போதும் எனக்கு
இன்னுமா என் அருமை புரியவில்லை உனக்கு ....