நீ யோகியா இல்லை போகியா

இலையுதிர் காலத்திற்கு பிறகு
மழைஉதிர் காலமென
மரத்திற்குத் தெறிக்கும்

இரவிடம் இரவல் வாங்கி
பகலிலே பவனிவரும்
பகலவனுக்கும் தெறியும்

தேய்த்து தேய்ந்த
வளர்த்து வளைர்ந்த
வான்மதிக்கும் தெறியும்

இன்பமும் துன்பமும்
இரண்டற கலந்த
பண்படவைக்கும் பாத்திரமென்று
இவனுக்குத் தெறியாது

தெறிந்தவன் யோகியாகிறான்
தெறியாதவன் போகியாகிறான்

எழுதியவர் : சுந்தர் (19-Sep-21, 3:31 pm)
சேர்த்தது : sundarapandian
பார்வை : 133

மேலே