பெண்ணாக ஏன் பிறந்தேன்.....!!

நான் பிறந்தவேளை
ஒரு புளுவேனும்
பிறந்திடவேண்டம் இப்பாரினில்
போதும் எனைப்போல் ஒரு
ஜீவன் இங்கே...........
துன்புற்று துவண்டு
வாழ்விற்காய் போராடும்
அவலநிலை......
பெண்ணாய் பிறந்தேன்
பிறர் நோகாமல் நடந்தேன்
பேய் என்றென்னை
பேசி ஒதுக்கினர்
புளுவாகத்துடித்தேன்
புதுப்பூவாக இருந்த என்
பூ மனம்
வாடி உதிரக்கண்டு
மகிழ்கின்றனர்
பொறுத்திருப்பேன் இவற்றை எல்லாம்
வேறுயாரும் செய்திருந்தால்
அனைத்துமென்
அரவணைத்து ஆறுதல்
கொடுக்கத்தவறி விட்ட
அன்னையினால் எனும்போது
குமுறி அழுகின்றது
குழந்தைத்தனமாய் குதுகலிக்க
ஆசை கொண்ட ஏன்
ஊமை மனசு.....!



எழுதியவர் : pirinthaa(ammu) (28-Sep-11, 6:42 pm)
பார்வை : 587

மேலே