💙என்னுடன் இருப்பவன் அவனே💙

பல நாட்களாய் பட்டினி இருந்தால்
தெரிவதில்லை
ஒருநாள் பட்டினியை முகத்தில்
காட்டிக் கொள்ளவில்லை
சில நாட்களாய் அவனுடன்
பயணிக்க வில்லை
கடிகாரத்தின் முள்களோ அவன்
கைகளில் இல்லை
தெரிந்தோ தெரியாமலோ அவன்
என்னுடன் இல்லை
அவனிடம் கூற என்னிடம்
சொற்கள் இல்லை
அவன் நினைவுகளும் என்னைவிட்டு
அழிவதில்லை




" அவன் மறந்தாலும் இறந்தாலும்
என்னுடனே இருக்கிறான் எப்பொழுதும் "

கோவிலுக்கு சென்றால் கடவுளாக
கல்லூரிக்கு சென்றால் ஆசிரியராக
பேருந்தில் சென்றால் பயணிப்பவனாக
மைதானத்திற்கு சென்றால்
விளையாடும் சிறுவனாக.....!!!!

" எவ்விடத்திலும் எனக்காக இருப்பவன் அவனே  "

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (20-Sep-21, 3:27 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 201

மேலே