தூரத்தில் உன்முகம்

நான் உன்னைவிட்டு
தூரமாய் சென்று
கொண்டிருக்கிறேன்
இருளான இரவில்

நீண்டு கொண்டு
இருக்கும்
உன் நினைவுகளின்
அடியொற்றிய பயணத்தில்

விரிவடைந்து
கொண்டிருக்கும்
பிரபஞ்சத்தில் எதிர்படும்
எல்லாமும் உன் முகமாக

வானில் நட்சத்திரங்கள்
மின்னிக்கொண்டிருக்க
பூமியில் இருந்த படியே
காலவெளியில் பயணிக்க
முயற்சிக்கிறேன்

ஒவ்வொரு கோளிலும்
ஏதாவது ஒரு தடயத்தை
எனக்காக நீ விட்டுச் -
சென்றிருப்பாய் என்று...

எழுதியவர் : மேகலை (22-Sep-21, 10:43 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 119

மேலே