வெளிநாட்டு வாழ்கை
அன்பு கடல் அம்மா
ஆதவன் போல் அப்பா
இனிய உயிர் தாரம்
ஈகைக்கு இனிய செல்வங்கள்
உண்மைக்கு உகந்த நண்பர்கள்
ஊர் குயில் பாட்டு
எங்கும் மண் வாசம்
ஏங்கும் என் சுவாசம்
ஐப்பசியில் தீபாவளி
ஒன்றாய் கொண்டாட எங்கே வழி
ஓரமாய் ஓடையின் ஓசை
ஔரப்பிரகம் பார்க்க ஆசை...