வாழ்வியல்

நேரிசை வெண்பாக்கள்


வேதாந்த சித்தாந்தம் சீரி யமுறைதான்
வேதாந்தம் கால்வைக்க சேர்குட்டை -- பேதம்
விளக்குமாம் சித்தாந்தம் தேறான் பிறிக்கான்
களங்கமிதை நீயும் அறி

தத்துவம் நம்தமிழர் ஆராய்ந்த சித்தாந்தம்
மொத்தம் வடக்கிற்கு போனதுபார் --- அத்தனையும்
கற்றவர் பேரைக் கழன்றார் சிறிதுமாற்றி
மற்றது வேதாந்த மாம்


......


தத்துவ சித்தாந்தங்கள் தமிழ் சித்தர்கள் ஆராய்ந்து தெளிந்து கண்டார்
இந்த சித்தாந்தக் கோட்பாடு நகர்ந்து வடக்குபோய் தன்பெயரை
வேதாந்தம் என்று மாற்றிக் கொண்டது. இதனை சிவஞான போத் விளக்க நூலின்
சில முன்னுரையில் காணலாம்தமிழர் சித்தாந்தம் பேச வடக்கில் வேதாந்தம் பேசினர்
சித்தாந்தம் விளங்கும் ஆனால் வேதாந்தம் குழப்பும்.

எழுதியவர் : பழனி ராஜன் (24-Sep-21, 9:48 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : vaazviyal
பார்வை : 26

மேலே