மாயையில் மனிதன் பா

ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா

வெறுங்கை என்று பிறக்கும் போதே
விரித்து விரித்து காட்டி சிரித்தாய்
ஆடை யில்லை எனினும் காலை
உதறி இல்லை என்றே காட்டினாய்
வெறுங்கை வீசி வந்த நீயும்
அதையிதை செய்தேன் என்கிறாய் சரியோ
வீணாய் போன தெனவழு வதென்நீ
எதுவுன் னுடையது அழிய யிங்கே
எடுத்து செய்து இங்கே கொடுத்தாய்
உன்னுடை யதெப்படி யழிந்தது பொய்தான்
ஆண்டிக் கும்வள் ளலுக்கும் ஒன்றுதான்
யேதுநீ செய்யினும் நாளை யதுவே
வேறொரு வருரிமை மறுநாள் அதுவும்
மற்றொரு வருரிமை இந்த
உண்மை ஆரா யாயோ மனிதனே





கீதையில் சொன்ன மாபெருந்த்த்துவம் . உலகில்யார் சொன்னார் இப்படி
எந்த வேதத்தில் சொன்னார்கள். யாரும் சொல்லவில்லை. கண்ணன்
காட்டிய வாழ்கை தத்துவம் படியுங்கள்

கீதையில் கண்ணன் சொன்னதால்தான் அர்ஜூனன் தெளிவு பெற்றான்.
நான் நீ உறவு சொத்து உரிமை எல்லாமே மாயை என்று அர்ஜுனனுக்கு
புரிந்தது. எது நடக்க யிருக்கிறதோ அது நடக்கட்டும். நாம் எதையும் நடத்து
வதில்லை. எல்லாமும் மாயை என்று உணர்ந்து சொந்தங்களைk கொன்று
குவிக்க காண்டீபம் தூக்கி நின்றான

எழுதியவர் : பழனி ராஜன் (24-Sep-21, 1:24 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 75

மேலே