மலைத் தேன் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஐயிருமல் ஈளைவிக்கல் அக்கிப்புண் வெப்புடல்நோய்
பைய வொழியும் பசியுமுறும் - வையகத்தில்
எண்ணுமிசை யாமருந்திற் கேற்ற அனுபானம்
நண்ணுமலைத் தேனொன்றி னால்
- பதார்த்த குண சிந்தாமணி
மலையிலிருக்கும் குறிஞ்சித் தேனினால் சிலேட்டும காசம், சுவாசம், விக்கல், கண்நோய், சுரம், உடல்கடுப்பு இவை நீங்கும்; நல்ல பசியெடுக்கும்; குரல்வளம் பெறும்; மருந்துண்ண துணை மருந்தாகப் பயன்படும்.