கொம்புத் தேன் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாதபித்த ஐயத்தை மாற்றுமுள மாந்தைதனைக்
காதமென ஓடக் கடியுங்காண் - பூதரமாம்
வம்புமுலை மாதே வருமருசி நீக்கிவிடுங்
கொம்புத்தே னன்றாகுங் கூறு
- பதார்த்த குண சிந்தாமணி
மாமரம் முதலிய மரக்கொம்புகளில் கட்டுகின்ற தேன் முத்தோடங்களையும், உள்மாந்தை, அருசி இவற்றையும் நீக்கும்