தீக்குச்சி

பூட்டு போட்ட வீட்டுக்குள்ளே
புத்தராய் நீ உறங்கினாயே
பூகம்பம் வந்த போதும்
புது சொந்தம் தேடவில்லை

உற்றார்கள் உறவினர்கள்
உடன் நீயும் இருக்கையிலே
உனை காக்க அனைவருமே
உயிரோடு தீக்குளிப்பர்

தன் தங்கை இறந்த போது
தடுமாறி நின்றாயே
தன் சோகம் மறைத்து தான்
தாய் தந்தை சொன்னார்கள்

பற்றற்ற வாழ்க்கையிலே
பாசத்திற்கு இடமேது
பற்றோடு நீ இருந்தால்
பார்க்கத்தான் ஆளேது

வாழ்க்கையின் தத்துவத்தை
வருத்தத்துடன் ஏற்ற நேரம்
வணங்கும்போது கோவிலிலே
விளக்கேற்ற உதவினாயே

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (25-Sep-21, 11:05 am)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : theekuchi
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே