ஒரு காதல் கவிதை

கல்லாய் சமைந்து
நிற்கிறேன் நான்

நீ காதல் பேசுவாயோ
கவிதை புனைவாயோ
சிற்பியாய் மாறுவாயோ

நான் உயிர்பெற
வேண்டும் உன்னால்

எந்தன் உணர்வுகள்
முழுமை பெறவேண்டும்
உந்தன் ஆழமான அன்பில்

இமைகள் பட்டாம்பூச்சியாய்
சிறகை விரிக்க வேண்டும்
முச்சூடும் அனலில் மேனி
சிலிர்க்க வேண்டும்

காயும் கனிந்திட உன் விரல்கள்
படர வேண்டும் மெல்ல மெல்ல

வற்றாத நீரூற்றின் ஆழம் காண
நீ கண்களை மூடிக்கொண்டு
இருந்தால் எப்படி இரவும் பகலாகும்

பிறைச் சந்திரன் உலவும்
இந்நேரம் உணர்ச்சிகள் யாவும்
அடங்கிய பின்பு சுகமாக தூங்க
வேண்டும் உன்னோடு உன்னோடு...

எழுதியவர் : மேகலை (25-Sep-21, 11:53 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : ennuyir
பார்வை : 216

மேலே