மச்சான்

யோவ் கறுத்த மச்சான்
எனக்கு என்ன வசிய வெச்ச
எண்பது தான் ஆனாலும்
ஐம்பது தானா குறைஞ்சிடுச்சு

சொக்கபல்லு விழுந்துடுச்சு
சொந்தம் பந்தம் மறக்கலயே
கொள்ளு பேரன் பாத்தாச்சு
கொமரி நெனப்பு போகலயே

அரும்பு மீச கருப்பு மச்சான்
குறுகுறுனு பார்க்காதய்யா
பொக்கை வாய் ஆனாலும்
வெக்கம் விட்டு விலகலயே

எழுதியவர் : இளம் சிற்பி (26-Sep-21, 9:34 pm)
சேர்த்தது : Ihsana Imthiyas
Tanglish : machan
பார்வை : 91

மேலே