மீண்டும் தமிழுக்காக
முதலும் நீயே முடிவும் நீயே
பகலும் நீயே நிழலும் நீயே
கண்டேன் தமிழே கண்டேன் தமிழே
காணோம் தமிழையே
கண்டேன் தமிழே
ஓடி ஓடி பாடி பாடி
தேடி தேடி வாய்ப்பை வாடி
கூடி ஒன்றும் ஆகவில்லை
தாடி தாடி மீண்டும் வாடி
கையில் உன்னை விட ஏதுமில்லை
வாய்ப்பு ஒன்றும் கிடைக்கவில்லை
வந்த வாய்ப்பும் நிலைக்கவில்லை
தமிழே என் அமுதே நீ வாழ்கவே
தமிழே என் உயிரே நீ வழங்கவே