❣️துணையாக அவன்❣🚶‍♂️

இரவு கூறியது
உன்னுடன் நான் இருக்கிறேன்
என்று.....!!!
நட்சத்திரம் கூறியது
அவளுடன் அவன் இருக்கிறான்
என்று....!!!
இரவு கூறியது
அவன் இல்லாமல் தான்
தனிமையில் தவிக்கிறாளே
என்று....!!!
நட்சத்திரம் கூறியது
அவள் அருகில் அவன் இல்லாமல்
போகலாம் - ஆனால்
அவளுடைய
மனதிலும் நினைவிலும் எப்பொழுதும்
அவனுடனே இருக்கிறாள்
என்று.....!!!

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (27-Sep-21, 5:53 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 316

மேலே