அவள்பால் கொண்ட காதல்

காபியா தேநீரா
என்றவளின்
மென்மையான குரல்
காபி பருகாமலே
போதை தந்தது அந்நேரம்
தேநீரில் மூழ்கி
முத்தெடுப்பதுபோலவே
கண்களுக்குள் காதலை
தேடிக் கொண்டிருந்தோம்
முதல் சந்திப்பில்
எனக்கு காபி பிடிக்கும்
அவளுக்கு தேநீர் பிடிக்கும்
என தெரிந்ததும்
ரொட்டித் துண்டுகளாய்
பரிமாறிக்கொண்டோம்
புதிதான காதலை
பால் கலக்காத காபியும்
தேநீரும் அவள் தர சொர்க்கத்திற்கே
அழைத்துச் செல்லுது
அவள்பால் கொண்ட காதல்...