தேற்றான் கொட்டை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கூற்றென் றுரைக்கு(ம்)விழிக் கோமளமே எப்போதும்
ஊற்றாம் பிரமியமும் உட்புண்ணும் - ஆற்றலிலா
வெட்டை அகக்கடுப்பும் வீறிவ ரிற்றேற்றாங்
கொட்டைதனை நீயெடுத்துக் கொள்
- பதார்த்த குண சிந்தாமணி
நேரிசை வெண்பா
தேற்றாம் விதையதுதான் தீபனத்தைப் போக்குமனல்
ஆற்றுமிரு கண்ணுக்(கு) அருமருந்தாங் - கூற்றா
யிருத்துங் கிரீச்சரத்தை எங்குமிலா(து) ஓட்டுங்
குருத்துவமுண் டாக்குங் குறி
- பதார்த்த குண சிந்தாமணி
தேற்றான் கொட்டைக்கு பிரமேகம், வெட்டை, உட்சூடு, பசி, வயிற்றுக்கடுப்பு, மூத்திரக் கிரீட்டை, இரணம் ஆகியன நீங்கும்; மந்தமுண்டாகும், கண்ணிற்கு மருந்தாகும்!