புளியங்கொட்டை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சுக்கில மேகமனற் றுன்னுமதி சாரமொடு
மிக்கிரணம் நீர்க்கடுப்பு வெட்டையறுந் – தொக்கு(ள்)துவர்
உற்றபுளி வித்திற் குறுகுணத்தை மேன்மேலும்
நற்றரையுண் மாதே நவிற்று
- பதார்த்த குண சிந்தாமணி
புளியங்கொட்டை சுக்கில மேகம், பித்தம், கழிச்சல், அதிபுண் மூத்திரக் கடுப்பு, வெள்ளை இவற்றை நீக்கும்
புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி, பசும்பாலில் அரைக்கரண்டி தூளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.