அடந்த காடு

அடந்த காடு

பரந்து விரிந்திருந்த
காடு

காற்று கூட
ஓய்வெடுக்க
இங்கு
வந்து விடும்

இல்லையெனில்
மழை மேகத்தை
அனுப்பி
வைத்து விடுகிறது

உள் நுழைய
காற்றுக்கும்
இடம் தர மறுக்கும்
நெருங்கிய
நெருக்கிய
மரம் செடி கொடிகள்

பொங்கிடும் வெள்ளம்
கூட
ஆறாய் மெலிந்து
தடுமாறித்தான்
தடம்
மாற்றி மாற்றி
வளைந்து நெளிந்து
இதனிடையே
செல்ல முடிகிறது

கானம் இசைக்கும்
கருங்குயில்கள்
அவ்வப்போது
அபஸ்வரமாய்
மயிலோ மற்றவையோ
குரல் கொடுக்க

நெருங்கிய மரங்களின்
கிளைகளில்
தொட்டு பிடித்து
விளையாடும்
குரங்குகள்

ஓடும் நீரில்
நீந்தி விளையாடும்
குட்டி யானைகள்
கூட்டம்

இதனை
கண்காணித்து
நிற்கும்
கரும் பெரும்
மலை குன்றுகளாய்
யானைகள் குடும்பம்

அழகின் உயிர்களை
தனக்குள் அடக்கி
அழகாய்த்தான்
காத்து நிற்கிறது
இந்த பச்சை காடு

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (2-Oct-21, 8:57 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 133

மேலே