அபச்சாரம்
அபச்சாரம்.
கள்ளுக்கொட்டில் பக்கம் போனால்,
அன்னையையும் அழைத்துச் செல்வேன்,
அன்னை என்னை அடிக்கவும் மாட்டாள்,
வையவும் மாட்டாள்,
என்ன அபச்சாரம்
என்பவர் எல்லாம்,
இந்த மனிதர்களே !
என் அன்னை அவள்
பராசக்தி, என்
மனதில் வீற்றிருக்கும், மனச்சாட்சி,
எங்கு சென்றாலும்,
எப்படி ?
விட்டுச் செல்வேன்
என் மனச்சாட்சியை!.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.

