நான்-அவள்-மழை

நான் அவள் மழை

விழியினில் ஓர் ஏக்கம்
மனதினில் ஓர் தயக்கம் நிறைய
அந்த சன்னல் ஓரம்
மழையினை ரசித்தபடி
பவளம் சில அணிந்து
பட்டுப்புடவை உடுத்தி
பருவமலரென அவள் நிற்க

என் வரவை கண்டு
சிறு புன்னகையிட்டு
மீண்டும் அச்சன்னலை
இருக்க பிடித்து
அவள் பார்வையை தொடர்ந்தால்

அவளிடம் மட்டுமே
உள்ள வசீகரம் ஒருமுறை
பார்த்தால் போதும் அனைத்தையும்
உணர்த்திடுவாள் அவ்விழிகளில்

மெல்ல அவள் அருகினில் சென்று
அவள் காணும் காட்சியை
ரசிக்க எண்ணினேன்

தீராது கொட்டி கொண்டிருக்கும்
மழையோசையில் அவள் கம்மல்
சினுங்கும் சத்தம் என்னை ஏதோ செய்ய
அவள் மழையை ரசித்துக்கொண்டிருந்தால்
நான் அவளை ரசிக்க தொடங்கினேன்

அந்த இருள் சூழ்ந்த இரவிலே
மின்னல் ஒளியில் அவள்முகம் காணும் அத்தருணம் அச்சிறு இதழில்
காற்றின் ஈரம் நிறைந்திருக்கும்
சிறு சிறு மழைச்சாரல்கள்
அவ்விதழில் தஞ்சம் அடைந்திருக்கும்
மோகம் கொண்ட காற்றோ
கூந்தலில் கொஞ்சம் உறவாடிக்கொண்டிருக்கும்

அவள் அதை பொருட்படுத்தாது
மழையை ரசிக்க ,இடித்த இடி
ஒன்றில் ஐயம் கொண்டு
இருக்கி அனைத்தால் என்னை
முதல் முறையாக

மங்கை திடீரென குழந்தையானால்
தேகம் படபடத்து
துடிப்புகள் அதிகமாகி
என் மார்பில் சாய்ந்தால்
இடி என்றால் அவ்வளவு பயமா என்றேன்
நெஞ்சை கிள்ளி
ஒரு நவட்டு சிரிப்பு
மீண்டும் சாய்ந்துகொண்டால்

பஞ்சு போன்ற தேகம்
பட்டு மட்டும் தடையங்கே
மழைச்சாரல் ஒருபக்கம்
குளிரூட்ட குளிருக்கு
இதமாய் அமைந்தன
அவள் இதழ்கள்

தீராது கொட்டும் மழையில்
இரு நெஞ்சம் நிறைய
பட்டு கலைந்திட
தேகம் கடந்த தேடல்
ஊடல் கடந்த காதல்
ஒருமனதாய் ஒன்றினைய

சுரக்காத கவியுண்டோ
பாடாத பாடலுண்டோ
தீட்டாத ஓவியமுண்டோ
அத்திருமேனியை அள்ளிப்பருகையில்

அனைத்தும் எனக்காக
ஆசை ஆசையாய் அவள் இசைக்க
இன்புற்று இலைப்பாறினோம்
மழை கொட்டித்தீர்க்கும் வரை

எழுத்து செ.இனியன்

எழுதியவர் : சே.இனியன் (10-Oct-21, 11:13 pm)
சேர்த்தது : இனியன்
பார்வை : 279

மேலே