தாஅம் தரவாரா நோய் - பழமொழி நானூறு 7

இன்னிசை வெண்பா

ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன்
மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஓ முடைய தொடங்குவார்க் கில்லையே
தாஅம் தரவாரா நோய். 7

- பழமொழி நானூறு

பொருளுரை:

உலகத்தினை அரசுசெய்த மாவலி அரசன் தன்னோடு அரசவையிலிருந்து அறிவுரை கூறும் அமைச்சன் கூறியவற்றை அறிந்து உணராமல் மூவடி நிலம் கொடுப்பது எனக்கு எளிய செயலாகும் என்று சொல்லி செருக்கின் மிகுதியால் தானமாக நீர்வார்த்துக் கொடுத்து உலகமெல்லாம் இழந்தான்.

ஆதலால், குற்றமுடைய தவறான காரியங்களைத் தொடங்குகின்றவர்களுக்கு துன்பங்கள் தாமே தேடிக் கொள்வதேயன்றி பிறரால் வருவதில்லை.

விளக்கம்:

துணையறியான் என்றது சுக்கிரன் 'கண்ணன் வஞ்சநெஞ்சன்; நினது செருக்கை அடக்க வந்து நிற்கின்றான். ஆதலின், அவனுக்கு மூவடியும் கொடா தொழிக' என்று கூறித் தடுத்தும் மாவலி அறிந்து கொள்ளவில்லை. மாவலி உலகத்தை இழந்தமையால் தனக்குக் கேடு தானே தேடிக்கொண்ட வனாகின்றான்.

ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன்
மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Oct-21, 9:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே