அவள் பார்வை
அவள் கயல்விழி ஓரத்தில் சிந்தும்
காதல் தேன் என்னை காந்தமென
சுட்டி இழுக்க என்வயமிழந்து நான்
தேன் உண்ணும் வண்டுபோல் அவளை
நாடி ஓடினேன் காதல் கனிந்ததென எண்ணி
எண்ணிய என் எண்ணம் நிறைவேறுமா
மன்மதனே வரம் தருவாயா நீ