தந்தைக்கு

என் பிள்ளையோடு உன் பிறந்த நாள்
மறக்கமுடிமா !

நேற்றைக்கும் இன்றைக்கும்
எவ்வளவு வித்தியாசம்
ஒரு பிரிவில்
ஒரு இழப்பில்
ஒரு மரணத்தில்
நேற்றிலிருந்து இன்று
தலைகீழாய் மாறிப் போகிறது
நேற்று
என் செவிகளை நிறைத்திருந்த
கம்பீரக்குரல் இனி நான்
கேட்கப் போவது இல்லை
அன்று
நான் தொட்டுப் பார்த்த
கரங்களை
இனிநான்
தொடப் போவதும் இல்லை.
இறுதியாக நீங்கள் சொன்ன அறிவுரைகள்
இனி யாரும் சொல்லப்போவது கிடையாது,
குழந்தையில் குறளையும் ,
ஆத்திசூடி,கல்வியும் கற்று தந்து,
எனக்கு குருவாக இருந்தவர்.முத்து போன்ற அழகான எழுத்துகள்
இவ்வயதிலும் தளராமல் எழுத, என்னால் முடியாது.
இலக்கியவாதியாகவும்,
பகுத்தறிவு சித்தனையாளராகவும்
பேச்சாளராகவும் தங்கவயலில் திகழ்ந்தவர்
நீங்கள் சேகரித்த அழிய செல்வங்கள்
என் மனதில் ஊதற போவதில்லை,
சங்கஇலகியங்கள் , இலக்கிய காவியங்கள்
கவிதைகள் கடல் போல் திகழ்ந்து, இருக்கிறது
உங்கள் பிறந்த நன்நாளில்
இனி உங்கள் பனி முழுமையாக தொடர,
உங்கள் அருள் வேண்டும் ஐயா !

எழுதியவர் : இராகு அரங்க இரவிச்சந்திர (18-Oct-21, 6:57 pm)
Tanglish : thanthaikku
பார்வை : 67

மேலே