சிவப்பு பூக்கள்
உழைப்பாளின் ரத்தம் சிந்திய செங்கொடி
உண்மையும் உணர்வும் நேர்மையும் பணிவும்,
உரிமையும் உடைமையும் போராடிய உத்தமர்கள்
வீதியெங்கும் சிவப்பு பூக்களைப் போல் உலவும்
செங்கொடியாயின் தினம் தொழிளலார்கள் தினமே!
மக்களின் தனியுடைமை, சமூகத்தின் பொதுவுடைமை
முழக்கங்கள் அஞ்சாத தோழர்களின் தோழன்
வெற்றி காணும் வரை சமூக நலன் காப்பாளர்கள்
இது கட்சிக்கொடியல்ல உழப்பவரின் நலன் காப்பவன்!
எட்டுத் திசையும் எங்கும் எதிரியெளிக்கும் உரிமைக்குரல்!
தவறுகள் நிகழும் இடத்தில் தயங்காமல் போரிடம் வேந்தர்
வேளான்மைஇயக்கமே! சுரங்க தொழிலாளர்களோ!
சுறு தொழில் வர்க்கங்கள் இயற்கை தொழில் கலைகள்
எங்கெல்லாம் உழைக்கும் உழைப்பாளி
அங்கெல்லாம் சிவப்பு பூக்கள் பூத்திடும்-இயன்ற
சிவப்பு பூக்கள் பூத்திடும் புதுமைகண்ணபிர்
தொழிலாளர்கள் இயக்கம் என்பது கட்சியல்ல
" மக்களின் நலம் காக்கும் மக்களின் பாதுகாவலன்! ,...!