இருண்ட வாழ்க்கை

நீலமான இரவில் நீ
நிம்மதியாக உறங்கி விட்டாய்

எனக்கு தான் நாழிகை கூட
நரகமாக மாறி விட்டது உன்னால்

சுற்றி திரிந்த காலம் எல்லாம்
கண் முன் வந்து செல்ல கார் இருளிலும் கண்ணீர் தான் எனக்கு

காரிகையே கற்றது கை மண்
அளவு என்பார் அந்த கை அளவிலும் என்னை உலக அளவு நேசித்தவளே

நான் செய்த சிறு பிழையில்
என்னை இப்படி விட்டு செல்வாய் என எனக்கு தெரியாது

மாததிற்க்கு ஒரு முறை தானே
அமாவாசை வரும் இவள் விட்டு சென்றதால்

என் வாழ்க்கையே அமாவாசை
ஆனது பூங்குயிலே

எழுதியவர் : (21-Oct-21, 5:20 am)
Tanglish : erunta vaazhkkai
பார்வை : 187

மேலே