முத்தம்

என் இனியவளே
இரவில் அன்புடன்
நீ தந்த "முத்தம்"
விடிந்த பின்பும்
என் இதழ்களிலும்
வாயினிலும் சுவை
குறையாமல் இருக்கு...!!

அய்யன் வள்ளுவனே
"பாலொடு தேன்கலந் தற்றே
பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்"...

என்று "முத்தத்திற்கு"
தனி இலக்கணம் வகுத்து
இரட்டை வரிகளில்
ஈராயிரம் வருடங்களுக்கு
முன்பே படைத்துள்ளார் ...!!

ஆதலால்
காதலர்களே காதல் செய்வீர்
நித்தம் நித்தம் "முத்தம்" கொடுத்து
மகிழ்ச்சிகொள்ளுங்கள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Oct-21, 9:58 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : mutham
பார்வை : 320

மேலே