சந்திரன்

சந்திரன்.

உயரத்தில் ஏறி
உட்கார்ந்திட்டான்,
ஏணி வைத்தாலும்
எட்டாத உயரத்தில்.

பெரும் பணம்
செலவழித்து - அவனை
சென்று பார்த்தவர்
சிலர் உண்டு.

செல்லாதவர்!
காதல் பாட்டுப்
பாடிடுவார்,
பாட்டுக்கோ தமிழில்
பஞ்சம் இல்லை.

காதலன் காதலியை,
அவன் பெயர் சொல்லி
மயக்கிடுவான்,
காதலி தன் கவலையை
அவனிடம் கூறி
அழுதிடுவாள்,
பிரிந்து வாழும்
காதலர்கள்,
அவனை தூது
அனுப்பிடுவார்

சிலகாலம் நீங்கள்
காத்திட்டால்!
காசு பணம்
இருந்திட்டால்!
உங்கள் தேன் நிலவை
அவன் வீட்டில்
கழித்திடலாம்!.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (22-Oct-21, 8:44 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : chandran
பார்வை : 79

மேலே