நன்றாற்றி அஞ்சா தமைந்திருக்கற் பாற்று – அறநெறிச்சாரம் 19

நேரிசை வெண்பா

கோட்டுநாள் இட்டுக் குறையுணர்ந்து வாராதால்
மீட்டொரு நாளிடையுந் தாராதால் - வீட்டுதற்கே
வஞ்சஞ்செய் கூற்றம் வருதலால் நன்றாற்றி
அஞ்சா தமைந்திருக்கற் பாற்று 19

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

விதித்த நாளை விட்டு குறைநாளில் வருவதுமில்லை; விதித்த நாளுக்குமேல் மிகுதியாக ஒருநாள் கூடக் கொடுப்பதும் இல்லை;

வருதலை முன்னர் அறிவியாது வந்து வஞ்சிக்கின்ற எமன் அழிப்பதற்கே வருவதனால் அறத்தினை மிகவும் செய்து மரணத்திற்கு அஞ்சாமல் அடங்கியிருத்தல் வேண்டும்.

குறிப்பு:

கூற்றம் உயிரையும் உடலையும் கூறுபடுப்பது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Nov-21, 3:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே