ஆறாம் விரல் கவிஞர் இரா இரவி

ஆறாம் விரல் ! கவிஞர் இரா .இரவி !

ஆறாம் விரல் என்பது அற்புதமான எழுதுகோல்
அகிலம் முழுவதும் முன்னேற்த்தின் காரணியானது !

ஆதிவாசியாக அலைந்திட்ட இரண்டுகால் மிருகத்தை
அன்பும் பண்பும் மிக்கவனாக நாளும் மாற்றியது !
--
கணினி அலைபேசி வந்திட்ட காரணத்தால் தான்
கையால் எழுதுவது குறைந்தாலும் அடிப்படையானது !

எழுதி எழுதி பழகிய கரங்களுக்குத்தான் உடன்
எழுதிட வரும் கணினியிலும் அலைபேசியிலும் !

அன்று காதலர்கள் கடிதம் எழுதிட உதவியது
அண்டம் முழுவதும் காதல் பரவிடக் காரணமானது !

நாகரீக மனிதனாக மாற்றி செம்மைப்படுத்தியது
நல்ல செய்திகளை உடன் அறிந்திட உதவியது !

கலை இலக்கியம் இன்றும் வாழ்ந்திட உதவுவது
கலைஞர்கள் இன்றும் மிளிர்ந்திடக் காரணமானது !

அறிவியல் அறிஞர்கள் புதியன கண்டுபிடிக்க உதவியது
அறிவியல் சாதனைகள் நிகழ்த்திட துணை நின்றது !

எழுத்தாணியில் தொடங்கி படிப்படியாக வளர்ந்தது
எண்ணிலடங்கா நூல்கள் உருவாகிட உரு கொடுத்தது !

இன்றளவும் பலருக்கு உற்ற துணையாக உள்ளது
இன்றைய மாணவர்களுக்கும் உறுதுணையாக இருப்பது !

நண்பர்கள் விரும்பி பரிசளிக்கும் நல் கொடையானது
நண்பர்கள் பலரை இணைப்பதற்கு துணை நிற்பது !

ஆறாம் விரலாகவே சாதனையாளர்களுக்கு உள்ளது
இருவிரல் துணையுடன் இமாலய சாதனைகள் புரிவது !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (11-Nov-21, 9:23 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 69

மேலே