கவிதையை முறை செய்

இரண்டு வரியானா லென்னக் குறளில்
எழுதிக் கவிதையில் சேர்


மூன்று வரியா கவிருந் தாலென்
ஊன்றிடு ஆசிரி யப்பா
வென்றிடு கவிஞர் வரிசை முன்னே


நான்கு வரியானால் நல்லதோர் வெண்பாவில்
ஆன்ற வெதுகையுடன் மோனையும் -- தோன்றும்
தனிச்சொல்லொன் றைச்சேர்த் தமைப்பாய் யிசையில்
இனியவெண்பா வாகுமாம் நேர்



வாணிமுரு கில்லாத் தமிழாகா வொன்றுமே
கோணாத் தமிழைநீ யோது

மதமார்க முண்டுத் தமிழுக் குமறவாதே
இந்துவென்ற ழைப்பாராம் கேள்

எழுதியவர் : பழனி ராஜன் (12-Nov-21, 4:16 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 142

மேலே