வஞ்சி விருத்தம்

வஞ்சி விருத்தம்

வஞ்சிவிருத்தம் தமிழ் பாவினங்களில் ஒன்றான விருத்தத்தின் வகைகளுள் ஒன்று.

இது அளவொத்த சிந்தடிகள் நான்கு கொண்டு அமையும்.

ஒவ்வொரு சீரிலும் மூன்று அசைக்கு மேல் வராது (இரண்டு அசை சீர், மூன்று அசைச் சீர் மட்டுமே வரும்)

வஞ்சி விருத்தம்
(காய் காய் காய்)

அளவொத்த சிந்தடிகள் நான்கமையும்.
அளவொத்த சிந்தடிகள் நான்கமையும்
அளவொத்த சிந்தடிகள் நான்கமையும்
அளவொத்த சிந்தடிகள் நான்கமையும் - வ.க.கன்னியப்பன்

வஞ்சிப்பாவின் பிற இனங்களைப் போலவே இலக்கியங்களில் இது மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது.

எடுத்துக்காட்டு
தேமா தேமா கருவிளம்

ஊனு யர்ந்த உரத்தினால்
மேனி மிர்ந்த மிடுக்கினான்
தானு யர்ந்த தவத்தினால்
வானு யர்ந்த வரத்தினான் - கம்பராமாயணம், யுத்தகாண்டம்- 1378

கல்வி
வஞ்சி விருத்தம்
(மா மா காய்)

அஞ்சில் வளையா(து) ஐம்பதிலா
பிஞ்சில் பழகும் வித்தையினை
அஞ்சிப் பழக உதவுமாசொல்
கெஞ்சிக் குருவின் வித்தையைக்கொள்! - பழனிராசன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Nov-21, 3:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 145

சிறந்த கவிதைகள்

மேலே