வெங்காயப்பூ - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வயித்துச் சிறுநோயை வாத வலியை
உயித்திரஞ் செய்யாமல் ஓட்டும் - குயிற்றாத
சிங்காரக் கொங்கைச் செழுந்திருவே நாட்டிலுறை
வெங்காயப் பூஎனவே விள்
- பதார்த்த குண சிந்தாமணி
வெங்காயப்பூ வாதம் முதலிய குன்ம நோய்களையும், குடலைப் பற்றிய வாத நோய்களையும், வயிற்று
வலியையும், வாத வலிகளையும் போக்கும்