தூதுளம்பூ - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
புஷ்டியுண்டாந் தாதுவுமாம் பொங்கழகோ(டு) ஆற்ற(ன்)மிகும்
முட்ட நரைத்து முதிர்ந்தமனைக் - கட்டழகு
மாதுளத்தி னீங்காது வைத்திடவும் எண்ணமுற்றால்
தூதுளத்தின் பூவுண்ணச் சொல்
- பதார்த்த குண சிந்தாமணி
இப்பூவால் தேகபலம், தாது விருத்தி, வனப்பு, பெண்வசியம் இவைகளுண்டாகும்