அவளது நினைவு
அவளது நினைவு
அவள் என்னுடன் இருந்த அந்த நாட்களில்
அவளிடம் இல்லாததை எண்ணி வருந்தினேன்
அவள் இல்லாத இந்நாளில் அவளிடம் நான்
இழந்ததை எண்ணி வருந்துகிறேன்
உண்மை அன்பில் கட்டிய கோட்டையில்
ஊடலும் பாடலுமாக கழித்த நாட்கள் பல
உரிமையுடன் கோபத்தைக் காட்டிய பொழுதும்
உயரிய பண்பினால் அதை உதறிதள்ளி விட்டு
ஊமையைப்போல் காலத்தைக் கடத்தி வந்து
உயிருடன் கலந்திட்ட ஓவியத்தை ஓர் நாள்
இழக்க நேரும் எனக் கனவில் கூட நினையாமல்
கடந்த நாட்களை எண்ணி கண்மூடி கண்ணீர் வழிய
நினைத்து நினைத்து துயரத்தில் மூழ்கினேன்