பொற்சீந்திற் கிழங்கு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பொற்சீந்தி லின்கிழங்கு பொங்கு மதுமேகம்
எச்சுகய ரோகம் இளைப்புவிஷம் - பச்சையாய்
ஓடிரத்த பித்தம் உயர்சுரங்க ளைக்களையுந்
தேடரிய மேனிதருஞ் சேர்
– பதார்த்த குண சிந்தாமணி
இது மதுமேகம், சயநோய், இளைப்பு, பாம்பின் விடம், இரத்த பித்தம், சுரம் இவற்றை நீக்கி காயசித்தியை உண்டுபண்ணும்