அதைத்தான் விரும்புவர்

உலகம் உருண்டை யென்று
உலகுக்கு உணர்த்தியவர்
கலிலியோ—இது
கிறித்துவ பைபிலிள்ள
வரிகளுக்கு முரண்பட்டதால்
மதவாதிகளின் விரோதத்தால்
மாய்தலுக்கு ஆளானார்

அப்போது கலிலியோவுக்கு
எண்பது வயது,
குருமார்களின் வார்த்தைகளுக்கு
முரண்பட்டால் மரண தண்டனையென
உணர்ந்த கலிலியோ
அகிலம் தட்டையானது
என்று சத்தியம் செய்தார்

காலத்திற்கேற்ப கண்ணியமுடன்
கலிலியோ நடந்து கொண்டதால்
மன்னிப்பு கிடைத்தது
மரியாதையுடன் விடுதலையானார்,
சீடர்கள் அவரை பார்த்து
நீங்கள் ஏன் உண்மையை மறைத்தீர்கள்?
இது முறை தானா?

அதற்குக் கலிலியோ சொன்னார்
உண்மையை க் கண்டறிவது
என்னுடைய வேலை-- ஆனால்
பிடிவாதக்காரர்களின்
பண்பற்ற செயலால்
பலியாக நான் விரும்பவில்லை
பாரிலுள்ளோர் அதைத்தான் விரும்புவர்

எழுதியவர் : கோ. கணபதி. (15-Nov-21, 6:19 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே