காற்றிலே தூய்மை 05112021

காற்றிலே தூய்மை 05/11/2021

மரமும் முகக் கவசம்
அணிந்து கொண்டதே !

புகையும் தெருவில்
ஊர்வலம் போனதே !

பட்டாசு ஒலியில்
சிறுவர்களோ உற்சாகத்திலே !

வண்ண வண்ண
ஜாலம் வானிலே !

மக்கள் வைக்கும்
வெடி சத்தமோ உச்சத்திலே !

மரமே வீடாய் தங்கியிருந்த
பறவைகளோ அச்சத்திலே !

தீபாவளி திருநாளில்
மக்களின் உவகையால்
கரியானது காசு
நாட்டிலோ அளவில்லா மாசு !

வரும் காலத்திலாவது
மகிழ்ச்சி கூடட்டும்
மாசு குறையட்டும்
தலைமுறை வாழட்டும் !!!


அன்புடன்
த.பிரபு

எழுதியவர் : த.பிரபு (18-Nov-21, 10:54 pm)
சேர்த்தது : த பிரபு
பார்வை : 88

மேலே