கடவுள்

கடவுளை நீ கண்டதுண்டா என்று நான்வினைவ
கண்டதில்லையே என்றான் ஏனென்று நான்...
காணக் கிடைக்கவில்லையே அதனால் என்றான் அவன்
காற்றை நீ கண்டதுண்டா என்று நான் கேட்க
கண்டதில்லை ஆனால் அது தரும்
சுக துக்கங்கள் உணர முடிந்ததென்றான்
வாசம்தாரும் தென்றலாய் என்னை அது
அணைக்கும் மற்றும் புயலாய் அது
என்னை தூக்கி அடிக்கும்போதென்றான்
அதற்கு நான்' கடவுளும் அது போலத்தான்' என்றேன்
எப்படி என்று அவன் வினவ
உன்னுள் உயிர்க்காற்று எப்போது போனது என்றேன்
தெரியாதென்றான் ..... ஆனால் நீ அதை
அதை மூச்சுக்கு காற்றாய், நாடியாய் உணர்கின்றாய்
அதை உனக்கு தந்தவன் ..... உண்டா...இல்லையா
என்றேன் நான்..... அதற்கவன்

கடவுளை கண்டுகொண்டேன் இப்போதென்றான்
சந்தேகம் ஏதும் இல்லாது....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Nov-21, 2:19 pm)
Tanglish : kadavul
பார்வை : 76

மேலே